2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை நீங்கவில்லை

Editorial   / 2020 ஜூன் 18 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது நடத்தப்பட்டு வரும் பிரத்தியேக வகுப்புகள் உட்பட மாணவர்களை ஒன்றுதிரட்டி நடத்தப்படும் அனைத்துத் தனியார் வகுப்புகளையும் உடனடியாக நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.

மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தனியார், பிரத்தியேக வகுப்புகளை, இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அரசாங்கம் முன்னர் தீர்மானித்திருந்த போதும், இந்த வகுப்புகள் யாவும், ஜூன் 29ஆம் திகதியே ஆரம்பிக்கப்படுமென, அரசத் தகவல் திணைக்களத்தால் தற்போது அறிவித்துள்ளமை குற்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X