எப். முபாரக் / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேருநுவர பகுதியில், பீடி ஒரு கட்டுக்குள் கேரளா கஞ்சாவை இட்டு வைத்திருந்த நபர் ஒருவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.முபாரீஸ் நேற்று (8) உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் சிறிமங்களபுர,சோமபுர பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், சேருநுவர பகுதியிலுள்ள கடையொன்றினுள் கஞ்சாவை புகைத்துக்கொண்டிருந்தப் போது, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை மூதூர் நீதிமன்றத்தில் நேற்று(08) முன்னிலைப்படுத்தியப் போது, பதில் நீதவான் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025