2025 மே 05, திங்கட்கிழமை

புதிதாக உருவாக்கப்பட்ட பதவிக்கு 65 பேர் நியமனம்

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், தீஷான் அஹமட்

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த, விவசாய விரிவாக்கம் தொழில்நுட்ப உதவியாளர்கள் 65 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் தலைமையில், திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில், இன்று(10) காலை நடைபெற்றது.

இப்பதவியானது, கிழக்கு மாகாணத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு, முதன்முதலாக 65 பேருக்கு வழங்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபே குணவர்த்தன, அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் , திணைக்கள அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X