Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட புதிய தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்கள் போன்றோர்களை வரவேற்கும் நிகழ்வு, இன்று(25) காலை 10 மணியளவில் கிண்ணியா நகர சபை மண்டபத்தில் நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது உறுப்பினர்களிடையே பல்வேறு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் உட்பட பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வுக்கு விருந்தினர்களாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயசிறி, கிண்ணியா உலமா சபை சூறா சபையின் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago