தீஷான் அஹமட் / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதையல் தோண்டுவதற்காக , பஜிரோ வாகனத்தில் தயாராக இருந்த மூன்று சந்தேக நபர்களை, மூதூர் பொலிஸார் சேருநுவர நகரப் பகுதியில் வைத்து நேற்று (23) இரவு கைது செய்துள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 37,36,26 வயதுடையவர்கள் என, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
மேலும், புதையல் தோண்டச் செல்வதற்கு தயாராக இருந்த பஜிரோ வாகனம், புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் ஸ்கேனர் மெசினும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காட்டுப் பகுதி ஒன்றுக்குள் புதையல் தோண்டச் செல்வதற்காக, சேருநுவர நகரப் பகுதியில், வாகனமொன்று நிற்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .