Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 09 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை, ஒருபோதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களில் இதுவும் ஒன்றெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களுக்கான "பங்கிலாப பகிர்வு" கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்திநராகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
அமைச்சர் மேலும் கூறிகையில், இயற்கை வளத்தை நிரம்பக் கொண்ட புல்மோட்டையை நாங்கள் பல வழிகளிலும் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்ட போதும் இங்குள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்காததால் அதனை முறையாக முன்னெடுக்க முடியவில்லையென்றார்.
மேலும், புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான நிலத்தில், மணல் கொள்ளையில் ஈடுபடும் நடவடிக்கைகளை நிறுத்துவதற்காகவே, இந்தப் பகுதியைச் சூழ தற்காலிக காப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவித்த அமைச்சர், ஊடகங்கள் வாயிலாக இந்த நடவடிக்கையை பூதாகரப்படுத்தி, நிறுவனத்தின் பெயரை கொச்சைப்படுத்தினர் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
4 hours ago