Editorial / 2020 மே 27 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மங்கி பிரிட்ஜ் 4ஆவது இராணுவப் படையணி முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள் இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, காத்தான்குடி கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு, நேற்று (26) இரவு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 19ஆம் திகதி, குவைத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களை, குறித்த இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், 24ஆம் திகதி களுத்துறை, பயாகலயைச்சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவருடன் இருந்த மேற்படி பெண்கள் ஒருவரும் தொடர் தலைவலி காரணமாக, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் பின்னர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, திருகோணமலை பொது வைத்தியசாலை நுண்ணுயிரியல் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அனுராத ஜயதிலக தெரிவித்தார்.
இதனையடுத்து, அவ்விருவரையும் காத்தான்குடி கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
17 Nov 2025