2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் உடலில் காயம்; ஒருவருக்கு கட்டாயச் சிறை

எப். முபாரக்   / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்து, அப்பெண்ணின் உடலில் காயங்களை ஏற்படுத்திய நபரொருவருக்கு, ஒரு வருட கட்டாயச் சிறைதண்டனை விதித்து, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று (03)  உத்தரவிட்டார்.                              

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரு இலட்சம் ரூபாய் நட்டஈடும் அத்தொகையைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் 6 மாதங்கள் சிறைதண்டனையும், 1,000 ரூபாய் தண்டப்பணமும் அதனைச் செலுத்தத் தவறின் மேலும் ஆறு மாதங்கள் சிறைதண்டனையும் விதித்து, நீதவான் உத்தரவிட்டார்.      

சம்பூர் கிழக்கு, மூதூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருக்கே, இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், கடந்த 4 வருடங்களுக்கு முன்னர், கிளிவெட்டி பகுதியில் குறித்த பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்து, உடலில் காயங்களை ஏற்படுத்தியதாக, அப்பெண்ணால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, மூதூர் பொலிஸார், குறித்த நபருக்கெதிராகத் தாக்கல் செய்த வழக்கு, மூதூர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

இந்நிலையிலே, சந்தேகநபரைக் குற்றவாளியாக இனங்கண்ட நீதவான், மேற்கண்ட தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X