2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பொதுமக்களை ஏமாற்றி பணம் அறவிட்டவர்களுக்கு விளக்கமறியல்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 04 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றால் வீடுகள், படகுகள் மற்றும் தொழில் அபிவிருத்திக்காக உதவிகளை வழங்கப்போவதாகவும் அதற்காக வேண்டி முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்து, பண மோசடியில் ஈடுபட்டு வந்த மூவரையும், எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.

ஏசியா பவுண்டேசன் நிதியுதவியுடன்  ஆனந்தபுரி பகுதியை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்லவுள்ளதாக மூன்று பேர் வருகை தந்து, அக்கிராமத்தில் ஒருவரிடம் 40 ஆயிரம் ரூபாய் வீதம் பண மோசடி செய்ததாகத் தெரிவித்து, திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

அம்முறைப்பாட்டையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர், இச்சந்தேகநபர்களைக் கைதுசெய்து, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களுக்கும் எதிராக பணம் மோசடி செய்தமை குறித்த 09 முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X