வடமலை ராஜ்குமார் / 2018 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், விவாத அரங்கொன்று, திருகோணமலை நகராட்சி மன்றத்தின் பொது நூலக மண்டபத்தில், ஆய்வாளர் யதீந்திரா தலைமையில், நாளை மறுதினம் (04) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
“சரியான, சிறந்த அரசியல் தலைமை எது?” என்னும் தலைப்பில் நடைபெறும் இவ்விவாத அரங்கில், தொடக்கவுரையை, நீங்களும் எமுதலாம் ஆசிரியர் கவிஞர் எஸ்.ஆர். தனபாலசிங்கம் நிகழ்த்தவுள்ளார்.
அதிபர் ஆர்.ஜெரோம், திருகோணமலை நகரசபை உறுப்பினர் க. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கொள்கை அடிப்படை பற்றியும், திருகோணமலை நகரசபை உறுப்பினர் தில்லைநாதன் பவித்ரன், ஆசிரியை திருமதி காயத்திரி நளினகாந்தன் ஆகியோர் சூழ்நிலை அடிப்படை பற்றியும் சிறப்பு உரைகளை நிகழ்ந்தவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .