2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு தம்பலகாமத்தில் புனர்வாழ்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்,  ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.கீத்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சிகிச்சை, தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில், நேற்று (27) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையின்  மனநலப் பிரிவு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் மனநலப் பிரிவு, திருகோணமலை மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மனநலப் பிரிவு ஆகியன இணைந்து இதனை ஆரம்பித்தன.

இதில் தம்பலாகாமம், கிண்ணியா, கந்தளாய் வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் கலந்துகொண்டு, தெளிவை வழங்கினார்கள்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சாய்சாலை (கிளினிக்), தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 02 மணி முதல் 04 மணிவரை  கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் மனநலப் பிரிவு வைத்தியரால் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.

போதைப் பொருள் பழக்கத்தைக் கொண்டவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றனர். இது ஆரோக்கியமான நிலைமை அல்ல. அவர்களை சமூகம் ஒதுக்கித் தள்ளக் கூடாது. அவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கு உதவுவதே  சரியான வழிமுறையாகும். எனவே, பாதிக்கப்பட்டவர்களை இங்கு சிகிச்சையளிப்பதன் மூலம் இப்பிரதேச மக்கள் பயன்பெறலாமென, அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .