Editorial / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில கால்லகேவுக்கும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமா, சூறா சபை, பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.
கிண்ணியாவில் போதைப்பொருளை ஒழித்தல், கடைகளில் சிகரெட் விற்பனை செய்வதைத் தடை செய்தல், வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டன.
இதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறும் கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில கால்லகே இதன்போது கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில் கிண்ணியா உலமா சபை கிண்ணியா கிளைத் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி, சூறா சபைத் தலைவர் பரீட் உட்பட பலர் பங்கேற்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .