Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவில் வெவ்வேறு பகுதிகளில் போதைமாத்திரைகள், கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர், திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (05) கைது செய்துள்ளனர்.
இதற்கமைய, கிண்ணியாவில் 170 சிவப்பு நிற போதை மாத்திரைகள், 48 வௌ்ளை நிற போதை மாத்திரைகள் என இரு வகையான போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டார்.
கிண்ணியா, பெரியாற்று முனை ஜாவா வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய குடும்பஸ்தரே, இவ்வாறு கைது கைதுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து, கிண்ணியா - 02 இல் றகுமானிய்யா நகரில் வசித்துவரும் 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து, 100 போதை மாத்திரைகளும் , அரசாங்க வியாபார அனுமதிப்பத்திரம் இல்லாத பெரும் தொகையான மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து, கிண்ணியா- 01 இல் ரகுமானிய்யா நகரில் வசித்து வரும் 36 வயதுடைய குடும்பஸ்தர் கைது கைதுசெய்யப்பட்டார்.
இவரிடமிருந்து, 500 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகலையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே, இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள், கசிப்பு என்பவை கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago