Editorial / 2018 நவம்பர் 24 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை தலமையாகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை லிங்க நகர் பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக போதை மாத்திரைகள், கேரளா கஞ்சாவை விற்பனை செய்த இருவரையும், அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபானம வைத்திருந்த ஒருவரையும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (23) இரவு கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
திருகோணமலை - கிண்ணியா ஜாவா வீதி, காந்தி வீதியைச் சேர்ந்த 26, 20 வயதுடைய இருவரும், சவக்கள வீதி, கலப்பை டவுன் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரையுமே திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இவர்களிடமிருந்து கேரள கஞ்சா, போதை மாத்திரைகள்,மதுபானம் என்பன, கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் மூவரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .