Niroshini / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை உவர்மலைப் பகுதியில் பாடசாலைக்கு சென்ற மாணவன் ஒருவனை மோட்டார் சைக்கிளில் மோதிய பெண்ணொருவரை இம்மாதம் 12திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ஹயான் மீ ஹககே இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற பதினான்கு வயதுடைய சிறுவன் ஒருவரை பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
இதில் காயங்களுக்குள்ளான சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸார் மோட்டார் சைக்கிளை செலுத்திய பெண்ணை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago