Suganthini Ratnam / 2016 ஜூலை 08 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை, கூட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.மதுசான் (வயது -04) என்ற சிறுவன் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்புக் கடிக்கு உள்ளாகி மயக்கம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சிறுவனின் தாய் கிணற்றடியில் ஆடைகளைக் கழுவிக்கொண்டிருந்த அதேவேளை, இச்சிறுவன் கிணற்றடிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்துள்ளான். திடீரென்று இச்சிறுவனின் அழுகைச் சத்தத்தை கேட்டு தாய் அவதானித்தபோது, அங்கு புடையன் பாம்பு ஒன்று காணப்பட்டதுடன், அப்பாம்பு சிறுவனையும் கடித்துள்ளது.
உடனடியாக கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
50 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
21 Mar 2026