2025 மே 21, புதன்கிழமை

பாம்பு தீண்டிய சிறுமி வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 15 வயதுடைய சிறுமி ஒருவர் பாம்புக் கடிக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பகுதியைச் சேர்ந்த எஸ்.சசினி மதுசிகா என்ற சிறுமி, வீட்டுக்கு முன்பாகவுள்ள கிணற்றில் குளிப்பதற்காகச் சென்றபோது பாம்புக் கடிக்கு உள்ளாகி மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமி, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .