2025 மே 21, புதன்கிழமை

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: முன் விசாரணை மாநாடு

Editorial   / 2025 மே 21 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முன் விசாரணை மாநாடு (pre-trial conference) நடத்த  கொழும்பு  மேல்  நீதிமன்றம், புதன்கிழமை (21) தீர்மானித்தது.

இந்த ன் விசாரணை மாநாட்டை  , கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன, ஜூன் 27 ஆம் திகதிக்கு  ஒத்திவைத்தார்.

கிரிஷ் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 70 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல்  நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடர்ந்தார்.

இலங்கையில் ரக்பி மேம்பாட்டிற்காக இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனமான கிரிஷ் லங்கா பிரைவேட் லிமிடெட் வழங்கிய ரூ. 70 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி,  குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .