2026 மார்ச் 21, சனிக்கிழமை

பிரதான நீர்க்குழாய் உடைவு: நீர் விநியோகத்துக்குத் தடை

Thipaan   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் முள்ளிப்பொத்தானை 96ஆம் மைல்கல் பாலத்துக்கு அருகில் காணப்பட்ட பிரதான குழாய் உடைந்து நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தம்பலகாமம், கிண்ணியா, ஆண்டாங்குளம், பாலையூற்று, திருகோணமலை நகரம் ஆகிய இடங்களிலுள்ள நீர் தாங்கிகளுக்கு நீர் கொண்டு செல்லும் பிரதான குழாயே உடைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டம்  முழுவதும் 24 மணி நேரம்  நீர்வெட்டு அமுலுக்கு வரும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின்  திருகோணமலை மாவட்ட பெறியியலாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X