Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், பதுர்தீன் சியானா
திருகோணமலை, தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலிங்கநகர், மதர் லேனிலுள்ள அன்னை திரேசா கட்டடப் பகுதி வடிகானிலிருந்து, ஞாயிற்றுக்கிழமை (11) காலை, மீனவர் ஒருவரது சடலத்தை மீட்;டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது அப்பா, நேற்று சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் பிறந்த நாள் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிச் சென்றதாகவும், பின்னர் காலை தம்பி சென்று பாரத்தபோது அவர் சடலமாக காணப்பட்டதாகவும் இறந்தவரின் மகள் தெரிவித்தார்.
திருகோணமலை, இலிங்க நகர் திருச்செல்வம் வீதி 18/19 யூதா கோயில் வீதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜேசுராஜா (55 வயது) என்ற ஐந்து பிள்கைளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை (10) மாலை, பிறந்த நாள் வீட்டுக்குச் செல்வதாக தெரிவித்துச் சென்றவர், மறுநாள் அதிகாலை ஆகியும் வீடு திரும்பாமை காரணமாக, அவரை அவரது மகன் தேடியபோதே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 250 மீற்றர் வடக்காக உள்ள வீதியின் கானுக்குளேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago
3 hours ago