2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பாலம்பட்டாறில் விபத்து 18 பேர் காயம்

Kanagaraj   / 2017 மார்ச் 04 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, பாலம்பட்டாறு பகுதியில் உழவு இயந்திரத்தில் ஏற்றிச்சென்ற நெல் அறுவடை இயந்திரத்தின் இரும்புபாகம் டிமோ பட்டா லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம்,  இன்று மாலை 6.30க்கு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய, ரஜஎல பகுதியில் இன்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் மரணமடைந்த நபரொருவரின் 01 வருட பூர்த்தியை முன்னிட்டு, 05ம் கட்டை பகுதியிலுள்ள அநாதை சிறுவர் இல்லத்துக்கு, தானமாக இரவு சாப்பாடு வழங்குவதற்காகவே அந்த டிமோ பட்டா லொறியில் அவர்கள் பயணித்துள்ளனர். அந்த லொறியுடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியில், மூன்று குடும்பங்களைச்சேர்ந்த 18 பேர் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்களில், மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X