2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

தீஷான் அஹமட்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளை நாவல் காட்டுப் பகுதியில், சட்டவிரோதமான முறையில், மணல் அகழ்வில் ஈடுபட்ட   இருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் 30, 35 வயதுடைய சந்தேகநபர்களையே கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய டிப்பர் வாகனம் மற்றும் உழவு இயந்திரம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X