அப்துல்சலாம் யாசீம் / 2017 ஒக்டோபர் 04 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, ஹொரவ்பொத்தானை பிரதான வீதியிலுள்ள ரொட்டவெவ பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான், எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று (04) உத்தரவிட்டார்.
இவ்வாறு தண்டம் செலுத்தியவர் திருகோணமலை,மிரிஸ்வெவ பகுதியைச்சேர்ந்த 23 வயதுடைய ஒபூர்தீன் சாஜித் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், ரொட்டவெவயில் இருந்து நொச்சிக்குளம் பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றி வந்த போது, விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து மொறவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
இதேவேளை, இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால், இன்றைய தினம் அறவிட்ட பணத்தை விட இரண்டு மடங்காக அறவிடப்படுமெனவும், நீதவான் எச்சரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .