Editorial / 2017 நவம்பர் 02 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், எம்.எஸ். அப்துல் ஹலீம், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம், பொன்ஆனந்தம்
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியின் அக்போபுர சந்தியின் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்கள்ளான இருவர், கந்தளாய் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கங்கைப் பகுதியில் இருந்து வந்த மண் டிப்பர் வாகனமென்று, மணிக்கூட்டுக் கோபுரத்துடன் மோதுண்டமையால் இவ்விபத்து இடம்பெற்றதென, பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி தூக்கத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே, இவ்வாறு விபத்து இடம்பெற்றிருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதியும் அவருடன் பயணித்த இன்னொருவருமே, இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை, கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago