2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

மண் அகழ்வில் ஈடுபட்ட சாரதிகள் கைது

தீஷான் அஹமட்   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட் 

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவு இயந்திரங்களையும், அதன் சாரதிகளையும் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்து, மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சுற்றி வளைப்பு, நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

மூதூர் கங்கை காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது, மணல் அகழ்வு அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதி முறைகளை மீறி, மணல் அகழ்வு இடம் பெற்றதை அவதானித்த விசேட அதிரடிப்படையினர், உழவு இயந்திரங்களையும் அதன் சாரதிகளையும் கைதுசெய்ததாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள், மூதூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் சாரதிகளை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X