Gavitha / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீத்தான்தட்டிப் பகுதியில் நேற்றுப் புதன்கிழமை (21) சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 உழவு இயந்திரச் சாரதிகளை கைதுள்ள பொலிஸார், அவர்களிடமிருந்த 3 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இம் மூன்று உழவு இயந்திரச் சாரதிகளும், மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்துக்கு மாறாக பிரிதொரு இடத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டமையினாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026