எப். முபாரக் / 2017 நவம்பர் 05 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் மனைவியையும் பிள்ளைகளையும் அடித்துக் காயப்படுத்திய நபரை, இம்மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம்.முஹீத் உத்தரவிட்டார்.
கண்டலடியூற்று, பைசல்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர், மதுபோதையில் வீட்டுக்குச் சென்று, தடியால் மனைவியையும் பிள்ளைகளையும் அடித்துத் துன்புறுத்துவதாக, கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டிருந்தாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை, திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago