2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மத்திய வங்கியின் திருமலை காரியாலய விழிப்புணர்வு செயலமர்வு

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தினால் விழிப்புணர்வு செயலமர்வொன்று   இன்று நடைபெற்றது.

இச் செயலமர்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயளாளர் ஜெ.ஸ்ரீபதியின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள்,கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான பல விடயங்களை இலங்கை மத்திய வங்கியின் திருகோணமலை பிராந்திய காரியாலய முகாமையாளர் ஏ.மைக்கல் நிரோசன்  தெளிவுபடுத்தினார்.  இதில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் மற்றும்  பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X