Thipaan / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாயில் மதுபானம் அருந்திவிட்டு, வீதியால் சென்றவர்களை அவதூறாகப் பேசிய நபர் ஒருவருக்கு, ஆறாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க, செவ்வாய்கிழமை(02) உத்தரவிட்டார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவருக்கே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறுpத்தநபர், மதுபானம் அருந்திவிட்டு, வீதியால் சென்றவர்களை அவதூறாகப் பேசுவது தொடர்பில், அவசரத் தொலைபேசி இலக்கத்தினூடாக பொலிஸாருக்கு பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் செவ்வாய்கிழமை (02) காலையில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
அன்றைய தினமே, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago