Editorial / 2017 ஜூலை 01 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியைத் தாக்கி காயப்படுத்திய கணவரை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க, இன்று (1) உத்தரவிட்டார்.
கந்தளாய் – வான்எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரின் மனைவி வேறு நபருடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறியே தனது மனைவியை சந்தேகநபர் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபரை நேற்று (30) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரின் மனைவி, கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026