2025 ஜூலை 28, திங்கட்கிழமை

மனைவி நாடு திரும்ப முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்து கணவர் போராட்டம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

சவூதி அரேபியாவுக்கு சென்ற தனது மனைவி, இலங்கைக்கு வர முடியாது சிரமப்படுவதாகத் தெரிவித்து, திருகோணமலை, புல்மோட்டை அறபா நகர் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அபூபக்கர் முகம்மது ரபீக், தனது இரண்டு பிள்ளைகளுடன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்துக்;கு முன்னால் இன்று திங்கட்கிழமை (19) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு சென்ற தனது மனைவி அலியார் மைமுனாச்சி, இலங்கை வர முடியாமல் கஷ்டப்படுவதாகவும் இது தொடர்பில் பல அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும் அரச அதிகாரிகள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், அதிமேதகு ஜனாதிபதி கவனம் எடுக்க வேண்டுமெனவும் போலி அடையான அட்டையைப் பெற்றுக்கொடுத்தும் முறைகேடான முறையிலும் தனது மனைவியை சவூதி அரேபியாவுக்கு அனுப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், தனக்கு நீதியை பெற்று தருமாறும் தெரிவித்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .