Gavitha / 2016 ஜூலை 02 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு அவரை காயப்படுத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட கணவனை, எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று வெள்ளிக்கிழமை (01) உத்தரவிட்டார்.
மூதூர், அக்கரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபருடைய மனைவி, வேறொரு நபருடன் தகாத தொடர்பில் இருந்தமை தெரியவந்ததால், மனைவியை தாக்கியதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த வியாழக்கிழமை (30) கைது செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
49 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
21 Mar 2026