2025 மே 22, வியாழக்கிழமை

மனைவியைத் தாக்கிக் காயப்படுத்தியவருக்கு 03 மாதங்கள் சிறை

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

திருகோணமலை, சாம்பல்தீவுப் பிரதேசத்தில் தனது மனைவியை அடித்துக்காயப்படுத்திய கணவரொருவருக்கு, மூன்று மாதங்கள் கட்டாயச் சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பெர்ணாண்டோ, நேற்று வியாழக்கிழமை (5) உத்தரவிட்டார். 

சாம்பல்தீவு, சல்லி, மூன்றாம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், கடந்த 04 மாதங்களுக்கு முன்னர் சாராயம் குடித்து விட்டு வந்து மனைவியைத் தாக்கிக் காயப்படுத்திய நிலையில் அதன் வழக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலே நேற்று (05) நடைபெற்ற வழக்கின் போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மேற்படி சிறைத்தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X