2025 ஜூலை 28, திங்கட்கிழமை

மயக்கமுற்றிருந்த பெண் உயிரிழப்பு

Thipaan   / 2016 செப்டெம்பர் 17 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண்ணொருவர், மூதூர் தள வைத்தியசாலையில் இன்று (17) காலை அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்த பெண், அதே இடத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான அரியநாயகம் வனிதாதேவி (32 வயது) எனவும் தெரியவருகின்றது.

குறித்த பெண்ணைக் காணவில்லையென அவரது வீட்டுக்கு சென்ற அயலவர்கள், அவர் மயக்க முற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு, அவரை மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு அனுமதித்ததபோதும்,  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவர், விஷம் அருந்தியிருக்கலாம் என, வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .