Editorial / 2019 நவம்பர் 29 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}




அ.அச்சுதன், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மூதூர் பிரதேச சபைக்குரிய சம்பூர் கிராமம், பாரதிபுரம் கிராமம் ஆகிய மக்களுக்கும் திருகோணமலை பட்டிணமும் சூழல் பிரதேச சபைக்குரிய ஆனந்தபுரி கிராம மக்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, சமூக அபிவிருத்தி கட்சியினரால் 250 முந்திரியம் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச்செயலாளர் கே.பிரகாஸ், சமூக அபிவிருத்தி கட்சியினுடைய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் சம்பூர் பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆதின கர்த்தா, சம்பூர் கிராம சேவையாளர், கிராம தலைவர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை கையளித்தனர்.
'பயன்தரும் மரம்' எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இதே வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட 300 குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடக்கது.
இதனோடு மரம் வளர்ப்பதற்கான ஏதுவான காரணிகள் தொடர்பாகவும் சமூக அபிவிருத்தி கட்சியினரால் மக்களுக்கு தெளிவூட்டப்பட்டு கன்றுகள் கையளிக்கப்பட்டன.
41 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago