2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாகாண மட்ட மீலாத் போட்டி

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017 ஆம் ஆண்டுக்கான  கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மீலாத் போட்டி, எதிர்வரும் வியாழன் (5)  மற்றும் வெள்ளி (6) ஆகிய நாட்களில், கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் நடைபெறவுள்ளது. 

கிழக்கு மாகாணத்திலுள்ள  9  கல்வி வலயங்களில் இருந்தும், வலய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றப் போட்டியாளர்கள், இதில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

முதலாம் நாள்  கிராத் , அல்குர்ஆன் மனனம் , பேச்சு (தமிழ், சிங்கம், அரபு, ஆங்கிலம்) , எழத்து போட்டிகள் (கட்டுரை , கவிதை , அரபு எழுத்தணி, சிறுகதை) கஸீதா ஆகிய போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.  இவை கனிஷ்டப் பிரிவுகளுக்கு நடைபெறும்.

இரண்டாம் நாளில் இதே போட்டிகள் இடைநிலை மற்றும் சிரேஷ்ட பிரிவுகளுக்கு நடைபெறவுள்ளதோடு , சகல பிரிவுகளுக்குமான பக்கீர் பைத், கோலாட்டம் , கதம்பம் , நாடகம் ஆகிய போட்டிகளும் நடைபெறவுள்ளன.

வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற பெண் போட்டியாளர்களுக்கு,  கிண்ணியா முஸ்லிம்  மகளிர் மகா வித்தியாலயம் மற்றும் ரீ.பி. ஜாயா   வித்தியாலயம்  ஆகியவற்றில் தங்குமிட வசதிகள் செய்யப்பட்டிருப்பதோடு, ஆண் போட்டியாளர்களுக்கு கிண்ணியா அல் அக்ஸா  மகா வித்தியாலம் , அப்துல் மஜீத் வித்தியாலயம்  ஆகியவற்றில்  வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X