Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 ஜூலை 17 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், ஏ.எம்.ஈ.பரீத், எப்.முபாரக்
கிண்ணியா, மாஞ்சோலையின் கரையோரப் பகுதியில் புதிதாக காபட் வீதியோன்று, 30 மில்லியன் 60 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபின் வேண்டுகோளுக்கினங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய கொள்கைகள் திட்டமிடல் பொருளாதார விவகார அமைச்சின் கீழ் இதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீதி அமைக்கப்படவுள்ள பகுதியை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கிண்ணியா பிரதேச செயலாளர் மற்றும் கிண்ணியா நகர சபை செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் பார்வையிட்டனர்.
இப்பகுதியைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதிகளில் கடந்த காலங்களில் வீதிகள் அமைக்கப்பட்ட போதும் இப்பகுதி கட்சி மற்றும் பிரதேச வேறுபாடுகள் காரணமாக அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் கைவிடப்பட்டதாக, இப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதன்பின் புதிதாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட இம்ரான் மகரூபிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமையவே, இவ்வீதி அமைக்கப்படவுள்ளது.
இவ்வீதி அமைக்கப்படுவதன் மூலம் கிண்ணியா பிரதான வீதியில் காணப்படும் வாகன நெரிசலை ஓரளவுக்கு குறைக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago