Editorial / 2017 ஒக்டோபர் 28 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், இரண்டு மாடுகளை திருடி இறைச்சிக்காக அறுத்து விற்பனை செய்த இருவரை, இம்மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று(27) உத்தரவிட்டார்.
கந்தளாய், வட்டுக்கச்சி,முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 29, 34 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர்கள், கந்தளாய் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மாடுகளை திருடி அதனை அறுத்து இறைச்சிக்காக விற்பனை செய்து வந்துள்ளனர்.
இது தொடர்பில், மாட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து நேற்று முன்தினம் (26) சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .