Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்,அப்துல்சலாம் யாசீம்,ஏ.எம்.ஏ.பரீத்.
கிண்ணியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த நரொருவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம் (26) கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், கிண்ணியா , ரியாத் நகரைச் சேர்ந்த 32 வயதான குடும்பத்ஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரவதாவது,
கிண்ணியா - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள தி/ இக்ரா வித்தியாலத்துக்கு முன்னால், முச்சக்கர வண்டியொன்றில் விற்பனை செய்து கொண்டிருந்த சமயத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, இவரிடமிருந்து மூன்று வகையான போதை மத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த நபர் ஏற்கனவே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டதற்காக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைக்காக போதை மாத்திரைகளுடன் கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago