Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசேட தேவையுடைய, யுத்தத்தால் பாதிப்புற்ற, பெற்றோரை இழந்த, வறிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் முகமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுது கருவிகள் வழங்கும் வைபவமும், விசேட தேவையுடையோருக்கு ஊன்றுகோள் வழங்கும் நிகழ்வும், திருகோணமலையில் நேற்று (24) நடைபெற்றது.
இந்நிகழ்வு, திருகோணமலை மாற்றுத்திறனாளிகள் அபிவிருத்திச் சங்கத்தால், அச்சங்கத்தின் செயலாளர் கே.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில், 67 கிராமங்களைச் சேர்ந்த 337 பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களும், யுத்தத்தால் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களும், விசேட தேவையுடையோருக்கு சக்கரக்கதிரை, ஊன்று கோள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைத் தவிசாளர் டொக்டர் ஈ. ஜி.ஞானகுணாளன் , ஸ்ரீ சத்திய சாயி நிலையத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவர் டி.குலவீரசிங்கம் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .