அப்துல்சலாம் யாசீம் / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் பிரிவு, முஸ்லிம் அற்றாவ பகுதியில், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சிறுவனொருவன் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பித்திகொள்ளாவ- அற்றாவ புதிய வளவைச்சேர்ந்த சபீர் றுஸைத் (14வயது) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சிறுவன் தனது வீட்டிலுள்ள மலசலகூடத்துக்குச் சென்றபோது, இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
பிரேத பரிசோதனைக்காக, கெப்பித்திகொள்ளாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .