Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்துக்கு உட்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மீன்பிடி நடவடிக்கைகளுக்கக, கடலுக்குச் செல்லும்போது, கடற்படையினரால் மீனவர்களின் வள்ளம், வலைகளை பறிமுதல் செய்யப்படுவதாக, கவலை தெரிவிக்கின்றனர்.
ஓரிரு தினங்களாக பத்துக்கும் மேற்பட்ட வள்ளங்கள், வலைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் இதனால் தொழிலுக்குச் செல்லாது இருப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே அரசாங்கம் இதற்கான நல்லதொரு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .