Janu / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் புதன்கிழமை (10) பதிவாகியுள்ளது.
ஈச்சந்தீவு- நாவற்காடு பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (42 வயதுடைய) மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

8 minute ago
19 minute ago
19 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
19 minute ago
25 minute ago