Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நாளை மறுதினம் (27) முன்னெடுக்கப்படவுள்ள சுகயீன விடுமுறைப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருமாறு, முகாமைத்துவ உதவியாளர்களிடம், அனைத்து முகாமைதுவ உதவியாளர்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில், அரசாங்கத்தால் தொடர்ச்சியாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ள தமது தொழில் உரிமைகளான தரம் I, II, III முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் உதவியாளர் சேவை அதி சிறப்புத்தர உத்தியோகத்தர்களுக்கும், சம்பளத் திட்டத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கல், பரீட்சை முறையிலான பதவி உயர்வு வழங்கல் உள்ளிட்டவைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சேர்ந்தவர்களின் கடமைப் பொறுப்புகளை, தமது சேவையைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்குதல், 2013 முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்த சேவை பிரமாணக் குறிப்பை, 2004இல் இருந்து நடைமுறைப்படுத்தல், முகாமைத்துவ உதவியாளர் சேவை என்பதை முகாமைத்துவ உத்தியோகத்தர் சேவை எனப் பெயர் மாற்றம் செய்தல் ஆகிய 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து, இந்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago