2025 மே 14, புதன்கிழமை

‘முன்னாள் போராளிகளுக்காக அதிகாரசபை ஏற்படுத்த வேண்டும்’

கனகராசா சரவணன்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

முன்னாள் போராளிகள், இன்று உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டுவருவதுடன், வாழ்வாதாரம் இன்றி மிகவும் துன்ப நிலைக்குச் சென்றுள்ளனர். எனவே, இவர்களின்
பிரச்சினைகளுக்கு விசேட கவனம் செலுத்தி, இவர்களுக்கு ஒரு தனியான அதிகார சபையை ஏற்படுத்தி, அதன் மூலமாக அவர்களின் பொளுளாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு உடல், உள ரீதியான வைத்திய சேவையைச் செய்ய அனுமதி தருமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக, இந்து சம்மேளனத்தின் தலைவர்  அருன்காந்
நாராயணசாமி ஜி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்கியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“முன்னாள் போராளிகள் இன்று தமது தேவை கருதி கிராமசேவகரிடம் சென்று
நற்சான்றிதழ் கேட்கும்போது, கிராமசேகவர்களால் அவர்கள் நன்று என்று சிபாரிசு செய்யலாமா? என்று யோசிக்கின்ற அளவுக்கு புறக்கணிக்கப்படுவதுடன்,
தங்களுடைய சொந்த உறவினர்களாலாயே மங்களகரமான ஒரு நிகழ்வில் கூட சமூகத்தில் புறக்கணிப்பட்ட ஒரு பிரைஜைகளாக அவர்களை பார்க்கப்படுகின்றார்கள்.

“அதேபோன்று, முன்னாள் பெண் போராளிகள் அதிகாரிகளால் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால் உடல், உள ரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பெண் அதிகாரி ஒருவரின் கீழ் பெண் போரளிகளை கொண்டுவந்து, அவர்களின் பிரச்சினைகளை அனுகுவதற்கும் கண்காணிப்பதற்குமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

“இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் பொருளாதார, உடல், உள ரீதியதன பாதிப்புகளில் இருந்து இவர்களை மேம்படுத்துவதற்காக, அரசாங்கம்
என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்வதற்கு இந்த சமமேளனம் தயாராக உள்ளதுடன், அதற்கான கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளது.

“அதன் அடிப்படையில், கொழும்பில் 500 பேருக்கு தொழில்வாய்பை உருவாக்கியுள்ளோம். அதேவேளை, யுத்தத்தால் அங்கங்களை இழந்துள்ள போராளிகளுக்கு இந்தியாவில் இருந்து விசேட வைத்தியரை வரவழைத்து வைத்தியம் செய்வது அல்லது இவர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று உடல், உள ரீதியான வைத்தியம் செய்வது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கான அனுமதியை கோரி, ஜனாதிபதி, பிரதி பாதுகாப்பு அமைச்சர், இராணுவத்தளபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X