Editorial / 2019 ஜூலை 21 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டபறிச்சான் தெற்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள அறபா நகர் கிராமத்திற்குள் நேற்றுஅதிகாலை உட்புகுந்த காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தியிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பல தோட்டங்களுக்குள் காட்டுயானைகள் உட்புகுந்து மரவள்ளி, வாழை முதலான தோட்டப்பயிர்களை அழித்து துவம்சம் செய்து வேலிகளையும் உடைத்து பயிர்களையும் நாசப்படுத்தியுள்ளன. இவ்வேளை, காட்டுயானைகளை விரட்டிச்சென்றபோது
விவசாயி ஒருவர் காயமடைந்துள்ள சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக மூதூர் கிழக்கில் கூனித்தீவு சம்பூர் உள்ளிட்ட இன்னும் சில இடங்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்திருப்பதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனைக் கட்டுப்படுத்த உரிய பகுதியினர் கவனம் செலுத்தவேண்டுமென இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
14 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago