2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் கிழக்கில் சதொச கிளை திறக்க கோரிக்கை

Editorial   / 2020 மே 07 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

திருகோணமலை, மூதூர் கிழக்கிலுள்ள பொதுமக்கள், தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களை நியாய விலைகளில் கொள்வனவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மூதூர் கிழக்கில் சேனையூர்,  கட்டைபறிச்சான், சம்பூர்,  கடற்கரைச்சேனை, சூடைக்குடா, கூனித்தீவு, இளக்கந்தை, பாட்டாளிபுரம், பள்ளிக்குடியிருப்பு உட்பட பல பகுதிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், மூதூர் கிழக்கில், சதொச விற்பனை நிலையமொன்றைக் திறக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும் சதொச கிளை திறக்கப்படவில்லை என, மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, இது குறித்து உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென,  மூதூர் கிழக்கு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X