Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டத்தில் அண்மைய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று மாத காலங்களுக்கான உலர் உணவு நிவாரணத்தை வழங்குமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைக் கடிதத்தை, தமிழ் மக்கள் கூட்டணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். நந்தகுமார், மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
“திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளில் அண்மையில் பெய்த கடும் மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
“பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெருகல் பிரதேசத்தில் வெள்ளம் பாய்ந்தோடியதால் பல நூற்றுக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர்.
“மீனவர்கள், கடலைகளின் வேகம் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல முடியாதுள்ளனர். அன்றாடக் கூலி வேலை செய்வோர் தொழிலுக்குச் செல்ல முடியாததால் ஒரு வேளை உணவுக்கே அல்லற்படுகின்றனர்.
“எனவே, இந்நிலையை ஓரளவு தற்காலிகமாகத் தீர்ப்பதற்கு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு மூன்று மாத காலங்களுக்கான உலர் உணவு நிவாரணத்தை வழங்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .