2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மூவின சமூகங்களிடையேயான சகவாழ்வு

Editorial   / 2017 நவம்பர் 04 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ். அப்துல் ஹலீம்

தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு  உட்பட்ட மூவின சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான சகவாழ்வு சம்மந்தமான கலந்துரையாடல், முள்ளிப்பொத்தானை, அல் ஹிஜ்ரா ஜுனியர் வித்தியால மண்டபத்தில்  நேற்று (03) நடைபெற்றது.

தம்பலகாமம் பிரதேச அபிவிருத்திக்கும் கல்விக்குமான ஒன்றியத்தின் தலைவரான என். ம் நஷ்ரப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேசத்தைச் சேர்ந்த சமூக தொண்டர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள், மத குருமார்கள், சமூக சேவையாளர்கள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய ராவய பத்திரிகையின் முன்னாள்  ஆசிரியரும் ஊடகவியாளருமான கலாநிதி

விக்டர் ஐவன், சகவாழ்வு சம்மந்தமாகவும் அரசியல் சமூகத்துக்கு அரசியலுக்கும் இடையிலான தொடர்பு, 30 வருட யுத்தம் சம்மந்தமான விடயங்கள், நாட்டின் தற்போதைய நிலைமை,

இன ஒற்றுமையை சம்மந்தமான விடயங்கள், சமூக நல்லிணக்கம் என்பன குறித்துக் கலந்துரையாடினார்.

அத்தோடு, இன, மத வேறுபாடின்றி ஒற்றுமையாகவும் சமாதானம் புரிந்துணர்வு கொண்டவர்களாக, நாட்டில் “ஒரே நாடு - ஒரே குரல்” என்கின்ற நிலையில் மூவின மக்களும் வாழ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சகோதர மொழி பேசுபவர்கள் அன்றி, அனைவரது ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடித்து எவருக்கும் பாதக விளைவுகளை ஏற்படுத்தாது, சுபீட்சமிக்க நாடாக இலங்கை எதிர்காலத்தில் வளர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிங்களம்,முஸ்லிம், தமிழ், பறங்கியர் என்ற இனவாத சிந்தனைகளை விட்டும் ஒற்றுமையாக ஒரு தாய்பெற்ற பிள்ளையாக வாழ்வதற்கு இவ்வாறான நல்லிணக்க நிகழ்வுகள் முன்மாதிரியாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X