Princiya Dixci / 2016 ஜூலை 29 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தரம் 4இல் கல்வி பயிலும் டி.என்.எச்.பிரபோதினி (வயது 09) என்ற சிறுமி, வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் மோதி காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி, பாடசாலைக்குச் சென்ற வேளையிலே இன்று வெள்ளிக்கிழமை (29) காலை, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரைக் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அக்போபுரப் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago